கோபிசெட்டிபாளையம் -குட்டி கோடம்பாக்கம்

Friday, June 26, 2009
பாவனி அணை


நீங்கள் முன்னே வந்த தமிழ் சினிமா படங்களை பார்த்து இருப்பீர்கள் பச்சை வயல்,பசுமையான தென் தோப்புகள் ,சேற்றில் நடவு செய்யும் பெண்கள் ,மற்றும் நீரோடை போன்றவை இது எல்லாம் காமெராக்கள் பெரும்பாலும் சுட்ட இடம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கோபிசெட்டிபாளையம் என்னும் சிறு நகரம் ஆகும் .நாடகர் பிரபு நடித்து சக்கை போடு போட்ட சின்னத்தம்பி போன்ற படங்கள் கோபி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து படமாக்கபட்டதுதான் .


குருமந்தூர் பகுதியில் எடுக்க பட்டது

அடிப்படையில் கோபி ஓர் விவசாயம் சார்ந்த நகரம் .நெல் ,கரும்பு,மஞ்சள் ,வாழை போன்றவை கோபி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகம் பயிரிடப்படும் .
கோபி பகுதியை சுற்றிலும் ஏராளமான சுற்றுலாதலங்கள் உள்ளன . பாவனி கொடிவேரி அணை,குண்டேரி பள்ளம் ,பாரியூர் கொண்டத்து காளியம்மன் திரு கோயில் , பவழமலை ,பச்சை மலை, முருகன் போன்றவை பிரசித்தி பெற்றவை ஆகும். மேலும் புகழ் பெற்ற பன்னாரி அம்மன் கோயில் , சந்தன புகழ் வீரப்பன் போன்றவற்றுக்கு புகழ் பெற்ற சத்தியமங்கலம் கோபிக்கு மிகவும் அருகாமையில் உள்ளது .
கொண்டத்து காளியம்மன் கோயில் பாரியூர்

பச்சைமலை முருகன் கோயில்



கொங்கு நாட்டிற்கே உரித்த பாரம்பரிய மிக்க மக்கள் .பழக்க வழக்கத்தில் மிகவும் மரியாதையாக இருப்பார்கள் .மிகவும் அமைதியான நகரம் .இங்கு புகழ் பெற்ற அரசியல் வாதியாக எல்லோராலும் அறியப்பட்ட செங்கோட்டையன் இந்த பகுதியை சேர்ந்தவர்தான்.கொங்கு வெள்ளாள மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர் .மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி


கொப்பு வாய்க்கால்


கோபியை சுற்றிலும் கொளப்பலூர் ,குருமந்தூர் ,நம்பியூர் ,அத்தாணி(கள்ளிபட்டி),அளுக்குளி ,கவுந்தபாடி போன்ற ஊர்களும் அமைந்துள்ளன .கல்விக்கு பல பள்ளிகள் ,கல்லூரிகள் கோபியில் உள்ளன .இதன் மூலம் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகிறார்கள் . மொத்தம் இங்கு பதிமூன்று பள்ளிகள் (நானும் கோபியில் படித்தவன் தான் )உள்ளன மற்றும் கலை அறிவியல் ,பொறியியல் ,சமயற்கலை போன்றவருக்கு இங்கு கல்லூரிகள் உள்ளன .

அப்புறம் கோபினாவே அன்பு பவன் தான் நகரின் மைய பகுதியில் அமைத்துள்ளது ,சைவ திற்கு தனியாகவும் அசைவத்திற்கு தனியாகவும் இந்த அன்பு பவன் உள்ளது .மேலும் அன்பு தங்கமாளிகை ,அன்பு சில்க்ஸ்,இந்தியா சில்க்ஸ் ,சங்ககிரி செட்டியார் ஜவுளிகடை போன்றவை இங்கு பிரசிதம் .

மேலும் வெளியூரில் இருந்து இங்கு வர போக்குவரத்து வசதிகளும் இங்கு உள்ளன .

ஒருமுறை எங்க ஊருக்கு வாங்க !!!!!!


1 comments:

கிரி said...

ஆனந்தன் கோபியை சேர்ந்த ஒருவரை பதிவுலகில் பார்ப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது. நான் தற்போது வெளியூரில் இருப்பதால் கோபியை ரொம்ப மிஸ் செய்கிறேன் :-(

கோபி பற்றி இடுகைகள் (படங்களுடன்) இட ரொம்ப ஆசை..அதற்கான நேரம் ஊருக்கு வரும் போது கிடைப்பதில்லை.

தொடர்பில் இருங்கள்

Post a Comment